Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிகாகோ இலிநொய்ஸ் பல்கலைக்கழகம் – பேராதனை பல்கலைக்கழகம் இடையே கல்வி மற்றும் ஆராய்ச்சி பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

சிகாகோ இலிநொய்ஸ் பல்கலைக்கழகம் – பேராதனை பல்கலைக்கழகம் இடையே கல்வி மற்றும் ஆராய்ச்சி பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

கல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய இலங்கையின் கல்வி, உயர்கல்வி, தொழிற்றுறை திறன் விருத்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்காக சாவகச்சேரியை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானியான கலாநிதி சிவா சிவநாதன் எதிர்வரும் காலங்களில் பல செயற்திட்டங்களை தேசிய மட்டத்தில் முன்னெடுக்கவுள்ளார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கலாநிதி சிவா சிவநாதன் ஆகியோரின் பங்குபற்றலுடன் சிகாகோ இலிநொய்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு இடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அழைப்புக்கு அமைய இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானியான கலாநிதி சிவா சிவநாதன் நாளை (05) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது யாழ். இந்து கல்லூரிக்கும், யாழ். வேம்படி மகளிர் உயர்தர கல்லூரிக்கும் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் ஸ்மார்ட் போர்ட் என்பவற்றுக்கான தொழில்நுட்ப உபகரணங்கள் கையளிக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்துகொள்ளவுள்ளார்.

இலங்கையில் பாடசாலை கல்வி மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ஸ்டிம் கல்வி முறைமை’ மேலும் விரிவுபடுத்துவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் கல்வி அமைச்சரின் கோரிக்கைக்கமைய விஞ்ஞானி சிவா சிவநாதன் தனது ஒத்துழைப்புக்களை வழங்குகிறார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கலாநிதி சிவா சிவநாதன் ஆகியோரின் பங்குபற்றலுடன் சிகாகோ இலிநொய்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு இடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைய பேராதனை பல்கலைக்கழகம் கால்நடை வைத்தியம், விலங்கு உணவு, கால்நடை சத்திர சிகிச்சை உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கப்படுகிற நிலையில் இரு பல்கலைக்கழகங்களுக்கிடையில் தகவல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை பரிமாற்றிக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி அமைச்சின் கோரிக்கைக்கமைய இலங்கையின் கல்வி, உயர்கல்வி, தொழிற்றுறை திறன் விருத்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்காக கலாநிதி சிவா சிவநாதன் எதிர்வரும் காலங்களில் பல செயற்திட்டங்களை தேசிய மட்டத்தில் முன்னெடுக்கவுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

தடகளத் தெரிவுக் குழு கூட்டு இராஜினாமா?; விளையாட்டுத் துறையில் புதிய பரபரப்பு!
செய்திகள்

தடகளத் தெரிவுக் குழு கூட்டு இராஜினாமா?; விளையாட்டுத் துறையில் புதிய பரபரப்பு!

July 27, 2026
முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
செய்திகள்

முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

July 27, 2026
தெஹிவளை மயான துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிதாரி கைது!
செய்திகள்

தெஹிவளை மயான துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிதாரி கைது!

July 27, 2026
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுக்கு உதவி செய்ததாக முன்னாள் அதிகாரி கைது
செய்திகள்

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுக்கு உதவி செய்ததாக முன்னாள் அதிகாரி கைது

July 27, 2026
புத்தளம்–கொழும்பு தனியார் பேருந்துகள் திடீர் வேலைநிறுத்தம்; பயணிகள் கடும் சிரமம்!
செய்திகள்

புத்தளம்–கொழும்பு தனியார் பேருந்துகள் திடீர் வேலைநிறுத்தம்; பயணிகள் கடும் சிரமம்!

July 27, 2026
20 மில்லியன் ரூபா கொள்ளைச் சம்பவம்; சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவருக்கு பிணை!
செய்திகள்

20 மில்லியன் ரூபா கொள்ளைச் சம்பவம்; சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவருக்கு பிணை!

July 27, 2026
Next Post
இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு; தமிழ் மொழியிலும் பாடப்பட்டது தேசிய கீதம்!

இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு; தமிழ் மொழியிலும் பாடப்பட்டது தேசிய கீதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு