முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணி ஒன்று தற்போது உருவாகியுள்ளது.
இந்த புதிய கூட்டணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிப்பதற்கு ஆதரவளிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக நியமித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை பிரதமராக நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் ஆதரிப்பது தொடர்பில் தாம் இதுவரையில் உறுதியான தீர்மானத்தை எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது அறிவித்துள்ளது.