Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மனைவியின் மருத்துவ செலவிற்கு போதிய பணமின்மை; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தம்பதியர்!

மனைவியின் மருத்துவ செலவிற்கு போதிய பணமின்மை; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தம்பதியர்!

3 years ago
in செய்திகள்

மனைவியின் நோய்க்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்ததாலும் அதற்கு போதிய பண வசதி இல்லாததாலும் மனைவிக்கு விஷம் கொடுத்து, கணவனும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெனிவெல்ஹார பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சூரியவெவ வெனிவெல்ஹார பிரதேசத்தில் வசிக்கும் 58 வயது மற்றும் 54 வயதுடைய கணவன் மனைவி இருவருமே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

54 வயதான மனைவி முதுகுத்தண்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக நீண்ட காலமாக நோய் நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக கணவனால் அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது.

இந்நிலையில், தனது மனைவியின் வைத்திய செலவுக்கு போதிய பணம் இல்லாததால் சுதந்திர தினத்தன்று (04) மாலை 4.30 மணியளவில் கணவன் மனைவிக்கு விஷம் கொடுத்து தானும் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

விஷம் அருந்தி வீட்டில் ஆபத்தான நிலையில் இருந்த கணவன் மனைவியை அயலவர்கள் சிகிச்சைக்காக சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த பெண் நீண்டகாலமாக நோயினால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ளும் பொருளாதார நிலை இல்லாத காரணத்தினால் தம்பதியினர் கடும் விரக்தியில் இருந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

இரண்டு வருடங்களுக்குள் அரசியலில் மிகப்பெரிய மாற்றம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!
செய்திகள்

இரண்டு வருடங்களுக்குள் அரசியலில் மிகப்பெரிய மாற்றம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

October 31, 2026
மீண்டும் சூறாவளி; வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம் – புயலாக மாறும் அபாயம்!
செய்திகள்

மீண்டும் சூறாவளி; வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம் – புயலாக மாறும் அபாயம்!

October 31, 2026
கடவத்தை மஹகட சந்தியில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு; 16 வயதுச் சிறுவன் காயம்
செய்திகள்

கடவத்தை மஹகட சந்தியில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு; 16 வயதுச் சிறுவன் காயம்

October 31, 2026
90 வயதிலும் உடற்கட்டமைப்புப் போட்டியில் பங்கேற்ற ஜப்பானிய வீரர்!
செய்திகள்

90 வயதிலும் உடற்கட்டமைப்புப் போட்டியில் பங்கேற்ற ஜப்பானிய வீரர்!

October 31, 2026
ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்
செய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்

October 31, 2026
2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!
செய்திகள்

2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!

October 31, 2026
Next Post
2500 ஆசிரிய உதவியாளர்கள் நியமனம்; அமைச்சரவை அனுமதி!

2500 ஆசிரிய உதவியாளர்கள் நியமனம்; அமைச்சரவை அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு