Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருமணமாகாத பெண் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி இல்லை!

திருமணமாகாத பெண் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி இல்லை!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

திருமணமாகாத பெண் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடியாது என்றும் திருமண பந்தத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் கருத்துதெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஒரு திருமணமாகாத பெண் (44) பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் வழக்கறிஞர் ஷ்யாமல் குமார் மூலம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் “கணவனை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற 35 முதல் 45 வயதுக்குட்பட்ட இந்திய பெண் விரும்பினால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டத்தின் 2(எஸ்)-வது பிரிவு கூறுகிறது. அதாவது திருமணமாகாத பெண் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி இல்லை என்பதை இது உணர்த்துகிறது. இது மனிதனின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. பாரபட்சமாக உள்ள இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். எனக்கு திருமணமாகவில்லை. எனினும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும்” என கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

இந்தியாவில் திருமண பந்தத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு தாயாவதுதான் விதிமுறையாக உள்ளது.திருமணம் செய்துகொள்ளாதவர்கள் குழந்தைக்கு தாயாவது விதிமுறை அல்ல. மனுதாரர் திருமணம் செய்துகொள்ளாமலேயே தாயாக விரும்புகிறார். அது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். குழந்தையின் நலனை கருத்தில் கொண்டே நாங்கள் பேசுகிறோம்.

திருமணம் என்ற பந்தம் நாட்டில் நிலைத்திருக்க வேண்டுமா வேண்டாமா? நாம் மேற்கத்திய நாடுகளைப் போன்றவர்கள் அல்ல. மேற்கத்திய நாடுகளில் பல குழந்தைகள் தங்கள் தாய் தந்தை யார் என்றே தெரியாமல் உள்ளனர். அதே நிலை இங்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை. திருமணபந்தம் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக நீங்கள் எங்களை பழமைவாதி என்று முத்திரை குத்தினாலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த சட்டத்தின் பிறபிரிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்களுடன் சேர்த்து இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
Next Post
சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழப்பு!

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு