பேஸ்புக்-இன் தாய் நிறுவனமான Meta, தனது முக்கிய சமுக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் Threads இல் அரசியல் தொடர்பான கன்டென்ட்-களை காட்டுவது தொடர்பான கொள்கை மாற்றத்தை அறிவித்துள்ளது.
இந்தியா அல்லாமல் அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகள் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் எதிர்கொள்ள உள்ளது. இன்றைய காலகட்டத்தில் அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் சமுக வலைத்தளம் முக்கிய பிரச்சார கருவியாக விளங்குகிறது.
இந்த முக்கியமான சூழ்நிலையில் இன்ஸ்டாகிராம் மற்றும் Threads இல் அரசியல் தொடர்பான கன்டென்ட்-களை காட்டுவது தொடர்பான கொள்கை மாற்றத்தை மெட்டா நிர்வாகம் அறிவித்துள்ளது, அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி வெள்ளிக்கிழமை பதிவிட்ட த்ரெட்ஸ் பதிவின் மூலம் வெளியிட்ட அறிக்கையில், நிறுவனம், இனி எப்போதும் போல் பயனர்களுக்கு அரசியல் தொடர்புகளான தரவுகளைத் தீவிரமாக விளம்பரப்படுத்தாது என்று அந்த பதிவின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் இன்ஸ்டாகிராம் மற்றும் Threads பயனர்கள் அவர்கள் பின்தொடரும் கணக்குகளில் இருந்து அரசியல் தொடர்பான பதிவுகள் வந்தாலும், அத்தகைய உள்ளடக்கத்தைக் காட்டுவதை நிறுத்திவிடும் என்று மொசெரி தெளிவுபடுத்தினார்.
இது அடுத்த சில வாரங்களில் நடைமுறைக்கு வர உள்ளது, இதன் மூலம் மெட்டாவின் அல்காரிதம் கன்டென்ட் பரிந்துரைக்கும் முறை பப்ளிக் கணக்குகளுக்குப் பாதிக்கும். குறிப்பாக, இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் மற்றும் எக்ஸ்ப்ளோர், த்ரெட்களில் பரிந்துரைக்கும் முறை கடுமையாகப் பாதிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த கட்டுப்பாட்டைத் தாண்டி ஒரு பயனர் அரசியல் தொடர்பான தகவல்களை பார்க்க விரும்பினால் அவர்களுக்கு ஒரு வழியை கொடுத்துள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் Threads பயனர் கன்டென்ட் டேப்-க்கு சென்று, அரசியல் கன்டென்ட்-களை தேர்வு செய்து, அங்கு Don’t Limit அல்லது Limit ஆகியவற்றைத் தேர்வு செய்துகொள்ள முடியும் என தெரிவித்தார். இந்த முறை பேஸ்புக்கிலும் விரைவில் வரும் என தெரிகிறது.
அதேசமயம் மெட்டா நிறுவனம் இலங்கையை குறிப்பிடவில்லை என்றாலும்,பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நாடுகள் என்று பொதுவாக தெரிவித்துள்ளமை பலர் மத்தியிலும் இது தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.