நாட்டின் சில பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப் பிறை தென்பட்டமையால் ஈகை திருநாளை (ரமழான்) இன்று கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் நேற்று அறிவித்தது.தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளி வாசலில் மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நேற்று ஆரம்பமானது.
இதன்போதே, இந்த விடயம் அறிவிக்கப்பட்டது. ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்ற இஸ்லாமியர்கள் இன்று ஈகை திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடு கின்றனர்.