மட்டக்களப்பு லியோ கழகமானது புதிதாக முன்னெடுக்கவுள்ள செயற்திட்டத்திற்காக பொது மக்களின் உதவிகளைக் கோரி முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
அந்தவகையில் மட்டு லியோ கழகம் தனது கழக உறுப்பினர்களால் “Waste to use” எனும் தலைப்பில் பொதுமக்களின் வீடுகளில் இருக்கும் பழைய பேப்பர்கள் மற்றும் காட்போட் மட்டைகள் என்பவற்றைச் சேகரித்து அதனை மீள் சுழற்சி செய்வதன் மூலம் புதிய அப்பியசா கொப்பிக்களாக மாற்றி அவற்றை வறிய மாணவர்களுக்கு வழங்கி அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவுவதற்கு திடடமிட்டுள்ளார்கள்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-13-at-20.56.07_77a72d53-724x1024.jpg)
எனவே பொதுமக்களின் வீடுகளில் இருக்கும் பழைய பேப்பர்கள் மற்றும் கார்போட் மட்டைகள் என்பவற்றை பெற்று கொள்வதற்காக லியோ கழக உறுப்பினர்கள் காந்தி பூங்காவில் எதிர்வரும் 24ஆம் திகதி மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரை அவற்றை சேகரிக்கும் பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள்.ஆகவே உங்கள் வீடுகளில் காணப்படும் பழைய பேப்பர்கள் மற்றும் காட்போட் மட்டைகளை அவர்களுக்கு வழங்கி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.
மேலதிக தகவல்களுக்கு
0762989189
0758768189
0720510948
0759763610