மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து இடம்பெற்று வரும் யானை – மனித மோதலை தடுப்பதற்காக பாரிய வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்ட பணியாக, அதிகளவில் யானைகளினால் பெரும்பாலும் சேதப்படுத்தப்பட்ட செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோப்பவெட்டுவான் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் காட்டு யானைகள் மறைந்திருக்கும் பற்றைக்காடுகளை அழிக்கும் நடவடிக்கைகள் இன்று (16) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பெருமளவிலான பற்றைக்காடுகள் ஜே.சி.பி. இயந்திரத்தின் ஊடாக அழிக்கப்பட்டு வருகின்றன.
செங்கலடி பிரதேச சபையுடன் இணைந்து மாவட்ட ஜீவராசிகள் திணைக்களம் இந்த பணிகளில் ஈடுபட்டிருக்கிறது.
செங்கலடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.பற்குணம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பற்றைக்காடுகள் அழிப்பு நடவடிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் கே. சுரேஷ்குமார், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் பலரும் பங்கெடுத்துள்ளனர்.