கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி புதிர் நெல் வழங்கும் கைங்கரியமானது நேற்று நண்பகல் 12.00 மணிக்கு பூசைக்கு புது அமுது , பொங்கல் செய்யப்பட்டு சுவாமிக்கு வைத்து மக்களுக்கும் புதிர் நெல் வழங்கப்பட்டது.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி புதிர் நெல் வழங்கும் இறைபணிக்கு முதலில் சுவாமிக்கு அளந்து வழங்கப்பட்டு வரிசை முறைப்படி குருமார் , ஆலயத்தினுள் சிறப்புப் பணி செய்பவர்களுக்கும், ஏனைய சகல இறையடியார்களுக்கும் புது நெல் வழங்கப்படும் கைங்கரியமானது இன்று முன்னெடுக்கப்பட்டது.
சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்று அதனைத்தொடர்ந்து புதிர் நெல் வழங்கப்பட்டது.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் புதிர் நெல்லும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.