இலங்கை பெண்களை வீட்டு பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான யோசனைகளையும், திட்டங்களையும் வழங்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏஜென்ஸிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார் .
எதிர்வரும் வருடங்களில் பணிப்பெண் ஆக வெளிநாட்டு வேலைக்கு பெண்களை அனுப்பவதை முற்றாக நிறுத்தி, அவர்களை திறமையான பிரிவுகளில் வேலைக்கு அனுப்புவதே இலக்காக காணப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.