Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உல்லாசப் பயணங்களை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு சென்ற சவூதி!

உல்லாசப் பயணங்களை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு சென்ற சவூதி!

3 years ago
in செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

சவூதி கலாச்சார அமைச்சு உலகின் முதல் தேசிய கலாச்சார மெட்டாவெர்ஸ் தளத்தினை கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. இது பயனர்களுக்கு மெய்நிகர் (Virtual Reality) வரலாற்று, உல்லாசப் பயணங்களில் பங்கேற்க உதவுகிறது.

மெட்டாவெர்ஸ் இன் இந்த அற்புதமான கண்டுபிடிப்பானது ஜெனரேட்டிவ் மீடியா இன்டலிஜென்ஸ் (GMI) எனும் செயற்கை நுண்ணறிவு அமைப்பு மூலம் மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

GMI உடன் இணைந்து ஹைப்பர்லெட்ஜர் ஃபேப்ரிக் 2.5 பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி dropp Group மற்றும் ‘ phygita l’ metaverse உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த அற்புதமான தளம் மெய்நிகர் ஆய்வு மற்றும் அத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி ஹெரிடேஜ் மெட்டாவர்ஸ் தளமானது எண்ணற்ற வசீகர அனுபவங்களை பயனர்களுக்கு வழங்குகிறது. சவூதி அரேபியாவின் செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டாடும் கலாச்சார காட்சிகள் வரலாற்றுச் சுற்றுப்பயணங்கள், இசை நிகழ்ச்சிகள், கலைக் கண்காட்சிகள் மற்றும் சிறு-விளையாட்டுகள் முதல் பல்வேறு வகையான செயல்பாடுகளை தூர தேசங்களில் இருந்து நிஜத்தில் அனுபவிப்பதை போல அனுபவிப்பதற்கான சந்தர்பத்தை இந்த தளம் ஏற்படுத்தி தருகிறது.’

மேலும் இத்தளமானது சவூதியின் புரட்சிகர தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு ஒரு சான்றாக உள்ளது. இது அன்மைய, சவூதியின் நிறுவன தின சிம்பொனி கச்சேரி போன்ற நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த டைனமிக் டிஜிட்டல் சூழலானது மொபைல் போன்கள், VR ஹெட்செட்கள் மற்றும் டெஸ்க்டாப்புகள் உட்பட பல சாதனங்களின் மூலம் அணுகக்கூடியதாக உள்ளது.

சவூதி கலாசாரத்தை சர்வதேச மக்களும் இரசிக்க, அனுபவிக்க வேண்டும் என அந்நாட்டு கலாச்சார அமைச்சகம் விரும்புகிறது. எனவே அவர்கள் உலகில் எங்கிருந்தாலும் கலாச்சார நிகழ்வுகளை அணுகச் செய்வதற்கான முயற்சியாக இது இருக்கிறது.

இந்தப் புதிய முன்முயற்சி, மக்கள் கலாச்சாரத்தை குறிப்பாக ஒன்லைனில் எப்படி அனுபவிக்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கிறது.

அதேசமயம் மெய்நிகர் அனுபவங்களில் பங்கேற்பதன் மூலம், மக்கள் கலாச்சாரங்களை தம்மிடையே பகிர்வதற்கான புதிய வழியை உருவாக்கித் தருகிறது. இது தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியம் இரண்டினையும் இணைக்கும் பாலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
சினிமா

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
Next Post
கஞ்சிபான இம்ரானால் கொலைமிரட்டல்; நாட்டை விட்டு வெளியேறிய பொலிஸ் அதிகாரி!

கஞ்சிபான இம்ரானால் கொலைமிரட்டல்; நாட்டை விட்டு வெளியேறிய பொலிஸ் அதிகாரி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு