பொத்துவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் தனது 14 வயது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை நேற்று (26) கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
தனது 14 வயது மகளை கடந்த மூன்று வருடமாக பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டு வந்த நிலையில், தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் அவசர பிரிவான 1929 தொலைபேசி இலக்கத்துக்கு பாதிக்கப்பட்ட சிறுமி முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து, பொத்துவில் பிரதேசத்தில் பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றும் 38 வயதுடைய சிறுமியின் தந்தையை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.