கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் நேற்று பிற்பகல் (28) இளைஞன் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
புளிச்சாக்குளம் பாதுகாப்பற்ற புகையிர கடவையினை கடக்க முற்பட்ட வேளையிலே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
புகையிரத கடவையின் மின்விளக்கு (சிக்னல்) பழுதடைந்து இருந்ததாகவும் அறிவிப்பு பலகை காட்சி படுத்தபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்ற நிலையில், புளிச்சாக்குளம் அப்பகுதி மக்கள் ரயில் பாதையை மறித்து நேற்று (29) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த முற்றுகையால் புகையிரத சேவை ஸ்தம்பிதம் அடைந்ததுடன், அதன் பயணத்திற்கு இடையூறு ஏற்பட்டதோடு, பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.
