இலங்கையில் போருக்கு முன்னரான காலப்பகுதியில் நடைபெற்ற அசம்பாவிதங்களையும், அனர்த்தங்களையும் விசாரிப்பதற்காக அரசாங்கத்தால் பல்வேறு ஆணைக்குழுக்கள் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டிருந்தன.
அதேசமயம் தற்பொழுது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினுடைய ஆட்சி காலத்தின் போது உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான குழுக்கள் என்பது போல பல்வேறு குழுக்கள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த குழுக்களினுடைய உருவாக்கம் உண்மையிலேயே இலங்கையில் கடந்த காலத்தில் நடந்த அனர்த்தங்களுக்கு பதில் சொல்வதாகத்தான் இருக்கவேண்டும் என்பதே உண்மையான விடயம்.
இது தொடர்பாக இலங்கையில் பிரதானமாக செயற்படும் சிவில் சமூக அமைப்புகள் ஒன்று கூடி இந்த குழுவிற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருக்கின்றனர்.அந்த அறிக்கையிலே அவர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ள விடயம், கடந்த காலங்களில் 1956 தொடக்கம் இலங்கையிலே அமைக்கப்பட்ட எத்தனையோ ஆணைக்குழுக்கள் விசாரணைகளை முடித்தும் அவற்றின் அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே அவைகள் முதலில் வெளியிடப்படவேண்டும் என்பது அவர்களுடைய மிக காத்திரமான கோரிக்கையாக இருக்கின்றது.
அந்த வகையிலே அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை கீழே தரப்படுகின்றது.