எல்பிட்டிய பகுதியில் 17 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று செவ்வாய்க்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, கொலை செய்யப்பட்ட சிறுமி வேறு ஒருவருடன் தொடர்பில் இந்தமையினால் கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர், சந்தேக நபரை எல்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பொலிஸார், சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.