மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய நடைமுறை ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. சாதாரணமாக கடந்த காலங்களில் நோய்வாய் பட்ட ஒருவர் மருந்து எடுக்க வேண்டுமாயின் இலக்க துண்டை எடுத்துக்கொண்டு அந்த வரிசைபடி வைத்தியரை சந்தித்து அவர் எழுதி கொடுங்கும் மருந்து சீட்டை மருந்து வழங்கும் இடத்தில் காட்டியே மருந்தினை பெறுவர்.
ஆனால் தற்போது ஒவ்வொரு தனிநபருக்கும் அடையாள அட்டையை போன்று வைத்தியரை அணுகும் ஒரு அட்டை வழங்கப் படுகிறது. அந்த அட்டையில் ஒருவருடைய நோய் என்ன, அவர் வைத்தியசாலைக்கு வந்த திகதி விபரங்கள், அவருக்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்ட மருந்து வகைகள் போன்ற தரவுகள் பார் கோர்ட் அடிப்படையில் பதியப்படுகின்றன.
குறித்த நபர் வைத்தியசாலைக்கு மீண்டும் மருந்தெடுக்க வரும் பொழுது வைத்தியசாலையில் பொருத்தபட்டுள்ள இயந்தரத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பார் கோர்ட் ஐ ஸ்கேன் செய்தால் உடனடியாக துண்டு சீட்டை பெற்றுக்கொள்ளலாம். அதனைக் கொண்டு வைத்தியரை சந்தித்த பின்னர் வைத்தியரும் குறித்த பார் கோர்ட் ஐ ஸ்கேன் செய்து குறித்த நபரின் நோய் அதுக்கு வழங்கவிருக்கும் மருந்தின் விபரங்களை உள்ளீடு செய்வார்.
மீண்டும் அதே பார் கோர்ட் ஐ ஸ்கேன் செய்து மருந்து வழங்கும் இடத்தில் மருந்தினை பெற்றுக்கொள்ள முடியும். முதன்முதலாக இவ் அட்டையை பெற வருபவர்கள் தங்கள், பெயர் ,முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் தெரிய படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.