Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் திகதி அறிவிப்பு!

இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் திகதி அறிவிப்பு!

2 years ago
in அரசியல், உலக செய்திகள், செய்திகள்

இந்தியாவில் சில நாட்களாகவே பாராளுமன்ற மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்புகளுக்கு மக்களும் அரசியல்வாதிகளும் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர் இந்நிலையில் தான் இந்த தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின் படி நேற்று பாராளுமன்ற தேர்தல் (Parliamentary Election Date) குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் மொத்தம் ஐந்து ஆண்டுகள் ஆகும். அந்த ஐந்து ஆண்டுகள் வருகிற மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. எனவே வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த பாராளுமன்றத் தேர்தல் (Lok Sabha Election Date) நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தேர்தல் கமிஷனராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் கமிஷனரான அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை இராஜினாமா செய்தார். இதன் காரணமாக தலைமை தேர்தல் கமிஷனரான ராஜீவ் குமார் மட்டும் தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்தார். எனவே இந்திய பிரதமர் தலைமையிலான குழு நேற்று முன்தினம் கூடி இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்தது.

இந்நிலையில் தான் தற்போது தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி பாராளுமன்ற தேர்தலானது 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு முதற்கட்ட மாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வருகிற ஏப்ரல் மாதம் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன் பிறகு இரண்டாம் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட தேர்தலானது மே மாதம் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. அதன் பிறகு மக்களவை தேர்தலின் நான்காம் கட்ட தேர்தல் மே மாதம் 13 தேதி நடைபெறவுள்ளது. மேலும் ஐந்தாம் கட்ட தேர்தல் மே மாதம் 20-ம் தேதியும் அதனை தொடர்ந்து ஆறாம் கட்ட தேர்தல் 25-ம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்த ஆறு கட்ட தேர்தலுக்கு பிறகு மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் மாதம் 4-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் வருகிற மார்ச் மாதம் 20-ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27-ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் மார்ச் 28-ம் தேதி நடைபெறும். மேலும் வேட்பு மனு வாபஸ் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது.

தொடர்புடையசெய்திகள்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச
அரசியல்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச

August 2, 2026
மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
Next Post
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கான அறிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கான அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.