Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீக்கப்படப்போகும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள்; ஓ.ஐ.சி 62 பேருக்கு சிவப்பு அறிவிப்பு!

நீக்கப்படப்போகும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள்; ஓ.ஐ.சி 62 பேருக்கு சிவப்பு அறிவிப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொலிஸ் மா அதிபர் மற்றும் விசேட அதிரடிப்படைத் தளபதி ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களை அழிக்கும் பாரிய நடவடிக்கை நாளை திங்கட்கிழமை (18ஆம் திகதி) மேல் மற்றும் தென் மாகாணங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தப் பிரதேசங்களில் செயற்படும் பாதாள உலகக் குழுக்களை அழிப்பதற்காக பொலிஸ் மா அதிபர் திரு.தேஸ்பந்து தென்னகோன் மற்றும் விசேட அதிரடிப்படைத் தளபதி வருண ஜயசுந்தர ஆகியோரின் மேற்பார்வையில் 20 ஆயுதமேந்திய தாக்குதல் பொலிஸ் படையணிகள் அந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளன.

இந்த படைகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் விஷேட அதிரடிப் படைத் தளபதியின் உத்தரவின் பேரில் மட்டுமே செயற்படுவதுடன், அடையாளம் காணப்பட்ட பாதாள உலகக் குழுக்கள் மற்றும் பாதாள உலக உறுப்பினர்களை அழிப்பதற்கு முழுநேரமாகச் செயற்படுகின்றன.

அந்த குற்றச் செயல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் உள்ள சில பொலிஸ் நிலையத் அதிகாரிகள் பாதாள உலகக் குழுக்களுக்கு அஞ்சுவதும் வேறு சிலர் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளை பேணுவதும்தான் பாதாள உலகக் குற்றச் செயல்கள் வேகமாக அதிகரிப்பதற்குக் காரணம் என அறியப்பட்டுள்ளது.

இதன்படி, பாதாள உலகத்தை அடக்கத் தவறிய 62 பிரதேசங்களின் நிலையத் தளபதிகளுக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளார்.

62 அதிகாரிகளையும் கொழும்புக்கு வரவழைத்த பொலிஸ் மா அதிபர், அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இனிமேல் அந்தப் பகுதிகளில் பாதாள உலகக் குற்றச் செயல்கள் இடம்பெற்றால், நிலைய பொறுப்பு அதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு, சாதாரண கடமைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார். .

பாதாள உலக குற்றச் செயல்கள் வேகமாக அதிகரித்து வரும் தென் மாகாணத்தில் பல அதிகாரிகளை இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி, தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் நாட்களில் தென் மாகாணத்தில் இருந்து சுமார் 10 பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் நிலைய கட்டளைத் தளபதிகளை நீக்குவதற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
Next Post
முஸ்லிம் அதிகாரிகளை ஓரங்கட்டும் கிழக்கு மாகாண சபை; இம்ரான் மகரூப் எம்.பி குற்றச்சாட்டு!

முஸ்லிம் அதிகாரிகளை ஓரங்கட்டும் கிழக்கு மாகாண சபை; இம்ரான் மகரூப் எம்.பி குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு