Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மீற்றர் பொருத்தாத ஓட்டோக்களுக்கு தடை!

மீற்றர் பொருத்தாத ஓட்டோக்களுக்கு தடை!

3 years ago
in முக்கிய செய்திகள்

யாழ்.மாவட்டத்தில் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டண மீற்றர் பொருத்தாக ஓட்டோக்கள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டாது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் ஆ. சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்-யாழ்.மாவட்டத்தில் வாட கைக்குச் செலுத்தும் ஓட்டோக்கள் கட்டண மீற்றர் பொருத்தாமையினால் ஓட்டோக்களுக்கான கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன.இதன் காரணமாகவும் வாடகை ஓட்டோ செலுத்துவோர் தொடர்பில் கிடைத்த பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பிலும் தீர்மானம் எடுப் பதற்காக நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட ஓட்டோ சங்கத்தினர், மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி நிதி மற்றும் அதனுடன் இணைந்ததாக வட மாகாண போக்குவரத்து அதிகார சபை தலைவர், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை போன்ற முக்கியமான துறை சார்ந்த உத்தியோகத்தர்களை அழைத்து யாழ்.மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் வாடகை ஓட்டோ ஓட்டுநர்கள் சம்பந்தமான பல விடயங்கள் ஆராயப்பட்டன. அதில் பொருத்தமற்ற – அளவுக்கதிகமான ஒலிகளை எழுப்பிச் செல்வது, அநாவசியமான கண்ணா டிகள் பொருத்தி இருப்பது மற்றும் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் கிழிந்த-மாசு படிந்த-வாகனங்களுக்கு பொருத்தமற்ற அளவிலான தேசியக்கொடிகளை பொருத்துதல் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டன. குறிப்பாக பயணிகள் அச்சப்படும் அளவுக்கு மட்டுமல்லாது வீதிகளில் பயணிப்போர் அச் சப்படும் அளவுக்கு உயர்ந்த ஒலி களை எழுப்பும் கருவிகளை ஓட்டோக்களில் பொருத்துவது தடுக்கப்பட வேண்டும். அது போல வாடகை ஓட்டோ செலுத்துபவர்கள் மரியாதைக்குரிய ஆடைகளை அணிந்து நல்ல பழக்கவழக்கங்களை கொண்டிருக்கவேண்டும் போன்ற விடயங்கள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது. அத்தோடு பதிவு செய்யப்படாத வாடகை ஓட்டோக்களும் யாழ்ப்பாண நகர பகுதிகளில் தொல்லையாக இருப்பதாக மாநகர சபையினால் குறிப்பிடப்பட்டது. எனவே பதிவு செய் யப்படாத ஓட்டோக்கலைப் பதிவு செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டது.

அதேபோல மிக முக்கியமாக 2017 ஆம் ஆண்டு முதலாம் இலக்க மோட்டார் வாகனச் சட்டத்தின் ஒழுங்கு விதிக்கு அமைய நாடு முழுவதிலும் கட்டணம் வசூலிப்பது அந்தந்த ஓட்டோக்களுக்கு உரிய கட்டண மீற்றர் பொருத்தப்படவேண்டும்கட்டண மீற்றர் பொருத்தப்படவேண்டும் என ஒழுங்குவிதியில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அது நடைமுறையில் இல்லை. இதனால் பல மடங்கு கட்டணங்களை பொதுமக்கள் செலுத்தவேண்டி இருப்பதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. போக்குவரத்து அதிகார சபையின் கணக்கெடுப்பின் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட் டத்தில் 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓட்டோக்கள் சேவை யில் உள்ளதாகவும் அதேபோல யாழ்ப்பாண நகரை பகுதியில் 2025 ஓட்டோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே ஜூலை மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னதாக வாடகைக்கு அமர்த்தப்படுகின்ற சகல ஓட்டோக்களுக்கும் கட்டண மீற்றர் பொருத்தப்படவேண்டும். பொருத்தப்பட்டால் மாத்திரமே சேவையில் ஈடுபட அனுமதிக்க முடியும். ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டண மீற்றர் பொருத்தப்படாத ஓட்டோக்களை வாடகை வண்டியாக பாவிப்பதற்கு அனும திக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டது. இதன்படி மாநகர சபையும் அதற்குரிய ஒழுங்குகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இந்த விடயங்களுக்கு சம்பந்தப்பட்ட ஓட்டோச் சங்கத் தினர் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தனர்- என்றார்.

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
Next Post
முதலை பணிஸ் 23,000 ரூபாவுக்கு விற்பனை!

முதலை பணிஸ் 23,000 ரூபாவுக்கு விற்பனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.