மட்டக்களப்பு திருமலை வீதி பிள்ளையாரடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புலவி பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த புதன்கிழமை (26.04.2023) ஆரம்பமானது. இன்றையதினம் (04.05.2023) தேர் பவனி நடைபெற்றதுடன் நாளையதினம் தீர்த்த திருவிழா நடைபெறவுள்ளது.
இவ்வாலயத்தின் ஓர் சிறப்பு யாதெனில், மட்டக்களப்பு திருமலை வீதியூடாக பயணத்தை ஆரம்பிப்போர் இன மத பேதம் இன்றி இவ்வாலயத்தில் வழிபட்டு தேங்காய் உடைத்தே பயணத்தை ஆரம்பிப்பர். இவ்வாறு வழிபட்டு செல்லும் பொழுது பயணம் நல்லதாக அமையுமென மட்டக்களப்புவாழ் மக்களால் காலங்காலமாக நம்பப்பட்டு வருகின்றது.