இலங்கை மதுவரித்திணைக்களத்தின் பிரதி மதுவரி ஆணையாளராக மட்டக்களப்பினை சேர்ந்த சண்முகம் தங்கராஜா பதவியுயவு பெற்றுள்ளார்.
தற்போது கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளராக கடமையாற்றிவரும் நிலையில் இந்த பதவி உயர்வு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பெரியகல்லாறை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் 1991ஆம் ஆண்டு மதுவரித்திணைக்களத்தின் மதுவரி பரிசோதகராக இணைந்துகொண்டார்.

அதனை தொடர்ந்து மதுவரித்திணைக்கள சிரேஸ்ட பரிசோதகராகவும் மதுவரி அத்தியட்சகராகவும் பதவியுயர்வு பெற்று தற்போது கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளராக கடமையாற்றிவரும் நிலையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (21) கொழும்பு தலைமைக்காரியாலத்தில் பிரதி மதுவரி ஆணையாளராக பதிவு உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் தமது கடமையினையும் ஆரம்பித்துள்ளார்.
தங்கராஜா அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பொது அமைப்புகள் ஊடாக சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதுடன் கலைகலாசார வளர்ச்சிக்கும் பங்களிப்பினை வழங்கிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
