ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைய, ஐக்கிய மக்கள் கூட்டணியை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (05) காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் (G. L. Peiris) மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) ஆகியோர் இன்று (05) காலை கைச்சாத்திட்டுள்ளனர்.
இதன்படி, சுதந்திர மக்கள் சபையின் 6 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து தனித்தனியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (G. L. Peiris), டிலான் பெரேரா (Dilan Perera) , கலாநிதி நாலக கொடஹேவா (Nalaka Godahewa), கே.பி. குமாரசிறி (K. P. S. Kumarasiri), கலாநிதி உபுல் கலப்பத்தி (Upul Galappaththi)மற்றும் வசந்த யாப்பா பண்டார (Wasantha Yapabandara) ஆகியோர் இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.
தற்போது கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்காக 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில், 6 பேர் இன்றைய தினம் புதிய கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.