நாட்டில் முப்படைகளிலிருந்து விலகிய அனைவருக்கும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவித்தல் ஓன்று விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டின் முப்படைகளிலும் சேவையாற்றி, எவ்வித முன்னறிவித்தலுமின்றி 02.04.2024 இற்கு முன்னர் சேவையிலிருந்து விலகிய அனைவருக்குமான பொது மன்னிப்புக் காலம் இம்மாதம் (ஏப்ரல்) 20 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் (மே) 20 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதிக்குள் முன்னறிவித்தலின்றி விலகிய படையினர் தங்களுடைய காரணங்களை தெரிவித்து, உத்தியோக பூர்வமாக தங்கள் படையிலிருந்து விலகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த காலப்பகுதிக்குள் காரணங்களை தெரிவிக்காது, அந்த நிலை தொடரும் பட்ஷத்தில் குறித்த அனைவரும் விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.