மட்டு புதூரில் வயோதிப பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட நபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது புதூர் பிரதேசத்தில் 4 பேர் கொண்ட குண்டா வாள்வெட்டு குழுவினர் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் மீது கடந்த 2ம் திகதி வாள்வெட்டுதாக்குதல் மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்து வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் வாள்வெட்டுதாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சம்பவதினமான நேற்று வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞன் மீது மீண்டும் தாக்குதல் நடாத்த இளைஞனின் வீட்டை குண்டா வாள்வெட்டுக் குழுவினர் முற்றுகையிட்டபோது அங்கு குண்டா வாள் வெட்டுக்குழுவினருக்கும் , இளைஞனின் உறவினருக்கும் இடையே பெரும் வாக்குவதம் ஏற்பட்ட நிலையில் தாக்குதலுக்குள்ளான இளைஞனின் அம்மாவான 64 வயதுடைய வயோதிப பெண் வெளியில் வந்து குண்டா குழுவினரை வீட்டுக்குள் நுழைய விடாது தடுத்து நிறுத்திய போது குண்டாகுழுவைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் தனது காச்சட்டையை கழற்றி வயோதிப பெண்ணிற்கு ஆண் உறுப்பை காண்பித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வயோதிப பெண்ணின் முறைப்பாட்டையடுத்து தலைமறைவாகியிருந்த குண்டா வாள்வெட்டு குழுவைச் சேர்ந்தவரையும் , ஆண் உறுப்பை காண்பித்தவரையும் நேற்று திங்கட்கிழமை இரவு பொலிசார் கைது செய்ததுடன் அந்த குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.