பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் விடுவிக்கும்வரை போர் நிறுத்தம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இஸ்ரேல் மந்திரிசபை கூட்டம் நேற்று(07) நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தின் பின் ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பெஞ்சமின் நெதன்யாகு இதனை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றதை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.
காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் தாக்குதல் வினர் கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்திய நிலையில் இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
அத்தோடு காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100 இற்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்திருந்தாலும் இன்னும் 130 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.