கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட 68 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொது சுகாதார பரிசோதகர்களால் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள ஹோட்டல்கள், பேக்கரிகள், மீன் மற்றும் இறைச்சிக் கடைகள், குளிரூட்டப்பட்ட உணவுப் பண்டங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட 700 இற்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என கொழும்பு பிராந்திய நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை நடவடிக்கைகளில் தரமற்ற உணவுப்பொருள்கள், உரிய வகையில் களஞ்சியப்படுத்தப்படாமை, லேபில்கள் மற்றும் பொதிகளிலுள்ள குறைபாடுகள் காரணமாக இத்தகைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.