மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலைகளில் கவனம் செலுத்துமாறு கலால் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினருக்கு நிதியமைச்சு அறிவித்துள்ளது.
மதுபானம் மற்றும் பியர்களின் விற்பனை மிகக் குறைந்த அளவில் இருப்பதால் மதுவரித் திணைக்களத்தின் வருவாயில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கலால் வரி வருவாய் குறைவடைந்துள்ளதுடன், மதுபானம் மற்றும் பியர் விற்பனை 40% சரிவடைந்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மது மற்றும் பியர் விற்பனை வேகமாக குறைந்து வருவதாக உற்பத்தி நிறுவனங்கள் நிதி அமைச்சிடம் தெரிவித்துள்ளன.
அதிக விலையே விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் என உற்பத்தி நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
குறித்த விடயத்தை கருத்தில் கொண்டே கலால் திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் திறைசேரி ஆகியவற்றிற்கு கலால் வரியை குறைப்பதற்கான வழிகள் குறித்து அவதானம் செலுத்துமாறு நிதியமைச்சு அறிவித்துள்ளது.
கலால் வரி குறைவடையும் நிலை காணப்படுவதால், மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலைகள் குறையும் வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், மதுபானத்தின் விலை உயர்வினால், சட்டவிரோத மதுபான பாவனையை மக்கள் நாடியமையினால் பல சுகாதார பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.