அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல அரசியல் அழுத்தங்களினால் உமா ஓயா திட்டத்தை மக்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தினால் வருடத்திற்கு 900 கோடி ரூபா நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞசன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் புனரமைப்பு தாமதமான 5 ஆண்டுகளில் 4,500 கோடி ரூபா நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சாம்பூர் மின் உற்பத்தி நிலையம் புனரமைக்கப்படாவிட்டால் இலங்கைக்கு வருடாந்தம் 3,200 கோடி ரூபா நட்டம் ஏற்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.