மட்டக்களப்பு ஏறாவூரில் பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றில் வைத்து ஐஸ்போதைப்பொருளை வியாபாரத்துக்காக கடத்திச் சென்ற பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளது ஏறாவூர் பொலிஸ்.
மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய ஏறாவூர் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸாரின் கண்காணிப்பில் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (14.05.2023 ) இரவு 8.30 மணியவில் நீதிமன்ற பாதையில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட பின்னர் 5 கிராம் ஐஸ்போதை பொருள் சிக்கியுள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவர் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருபவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.