Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் பெண்ணுக்கு ஊசி மூலம் போதைப்பொருள் செலுத்தி 10 பேர் கூட்டு வன்புணர்வு!

யாழில் பெண்ணுக்கு ஊசி மூலம் போதைப்பொருள் செலுத்தி 10 பேர் கூட்டு வன்புணர்வு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரின் தாய் தந்தையர் உயிரிழந்ததை அடுத்து, குறித்த பெண்ணும், அவரது மூத்த சகோதரியும் பருத்தித்துறை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் , பெண்ணின் மூத்த சகோதரி உயிரிழந்த நிலையில், இவரது சகோதரன் இவரை தனது இல்லத்திற்கு அழைத்து சென்று இருந்தார்.

கடந்த ஐனவரி மாதம் சகோதரனின் இல்லத்தில் தங்கியிருந்த போது. சகோதரன் வீட்டில் ஆட்களற்ற வேளை உள்நுழைந்த கும்பல் ஒன்று போதைப் பொருளை வழங்கி, அதனை பலாத்காரமாக நுகர வைத்து, அடித்து துன்புறுத்தி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து வந்த நாட்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன.

இந்நிலையில் நேற்று (22) பருத்தித்துறை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் குறித்த பெண் தங்கி நின்ற வேளை அங்கும் குறித்த கும்பல் சென்று, பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி, தாக்கி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

ஜனவரி மாதம் முதல் பல்வேறு தடவைகள் 10 பேரை உள்ளடக்கிய கும்பல் போதைப் பொருளை கட்டாயப்படுத்தி நுகர வைத்து, உயிர் அச்சுறுத்தல் விடுத்து. தன்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

பெண்ணின் வாக்குமூலத்தை முறைப்பாடாக பதிவு செய்துள்ள பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!
செய்திகள்

பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!

June 18, 2026
கிழக்கு மாகாண நிர்வாகக் குழப்பம் – உத்தியோகத்தர்கள் கடுமையாக பாதிப்பு; இம்ரான் எம்.பி!
செய்திகள்

கிழக்கு மாகாண நிர்வாகக் குழப்பம் – உத்தியோகத்தர்கள் கடுமையாக பாதிப்பு; இம்ரான் எம்.பி!

June 18, 2026
தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்த சுங்கத்தினர்!
செய்திகள்

தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்த சுங்கத்தினர்!

June 18, 2026
மரண தண்டனையே மேல் – தடுப்புக் காவலுக்கு திரும்பமாட்டேன்; சுரேஷ் சலே
செய்திகள்

மரண தண்டனையே மேல் – தடுப்புக் காவலுக்கு திரும்பமாட்டேன்; சுரேஷ் சலே

June 18, 2026
அமெரிக்கா–ஈரான் ஒப்பந்தம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 15% வீழ்ச்சி!
செய்திகள்

அமெரிக்கா–ஈரான் ஒப்பந்தம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 15% வீழ்ச்சி!

June 18, 2026
களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!
செய்திகள்

களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

June 18, 2026
Next Post
கொழும்பில் வேலை பெற்றுத்தருவதாக கூறி சிறுமிகளை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை

கொழும்பில் வேலை பெற்றுத்தருவதாக கூறி சிறுமிகளை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு