லங்கா சதொச நிறுவனம் இரண்டு நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளைச் சீனியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதனை நேற்று முதல் அமுலாகும் வகையில் 243 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், 400 கிராம் பால் மாவின் விலையை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1080 ரூபாவாகும்.