கொவிஷுல்ட் (Covishield) தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அஸ்ட்ரா செனெகா (AstraZeneca) தடுப்பூசி நிறுவனம் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த தடுப்பூசியானது பல்வேறு வழக்குகளில் உயிரிழப்புக்கள் மற்றும் உடன் உபாதைகளை ஏற்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது சிலருக்கு குருதி உறைவு நோயை ஏற்படுத்தியுள்ளதோடு குருதிக் கலங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி நிறுவனத்துக்கு எதிராக 51 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் 100 மில்லியன் யூரோ பெறுமதியான நஷ்டஈடு கோரப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
குறித்த நிறுவனம் கொவிட்ஷுல்ட் தடுப்பூசியை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.