மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து ஐஸ் போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று (30) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் கீழ்ப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 14. 570 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட நபர்கள் காத்தான்குடி மையவாடி வீதி மற்றும் காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அதில் ஒருவர் பிரபல மென் பானம் ஒன்றின் முகவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் , குறித்த சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .