மட்டக்களப்பு லியோ கழகத்தின் “Waste to Use” எனும் செயற்திட்டத்தின் ஊடாக மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 1000kg கடதாசி கழிவுகள் மீள்சுழற்சிக்காக கையளிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் திரட்டப்படும் நிதியானது புதிய அப்பியாச கொப்பிகளாக பின்தங்கிய கிராமங்களில் வாழும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இந்த கையளிப்பின் போது மட்டக்களப்பு லியோ கழகத்தின் தலைவர் ஹரிஷ் (Leo Harish) மற்றும் செயற்றிட்ட தலைவர் சது (Leo Shathu) மற்றும் செயற்றிட்ட பொருளாளர் கரிசோபன் (Leo Guest Harishoban) மற்றும் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அதேசமயம் இவ் கடதாசி கழிவுகளை எமக்கு வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றினை தெரிவிப்பதோடு மக்களிடம் இருந்து சேகரிப்பதில் ஈடுபட்ட ஒவ்வொரு கழக அங்கத்தவர்களுக்கும் மற்றும் சேகரிக்கப்பட்ட கடதாசி கழிவுகளை 2 மாதகாலமாக பேணி சேமித்து வைப்பதற்க்கு இட வசதியினை வழங்கிய குபேரா உரிமையாளர் சாந்தசேனா (Lion Santhasena)அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொண்டனர்.