ரஷ்ய – உக்ரைன்(Russia – Ukraine) போருக்கு சென்ற பல இலங்கைப் படையினர் தற்பொழுது உயிருடன் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட(Gamini Waleboda ) தெரிவித்துள்ளார்.
நேற்முன்தினம் தினம்(2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ரஷ்ய வாடகை படையில் இணைந்து கொண்ட 40 இலங்கை படையினரின் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவம் மற்றும் பொலிஸ் என்பனவற்றிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டவர்கள் இவ்வாறு ரஷ்ய உக்ரைன் போரில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இருபது லட்சம் ரூபா மாதச் சம்பளம் வழங்குவதாக கூறி குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு லஞ்சம் வழங்கி இவ்வாறு இலங்கைப் படையினர் ரஷ்யா, உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இராணுவ பின்வரிசை சேவைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட படையினர் முன்னரங்கப் போரில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் வெக்னர் கூலிப் படைக்கு விற்பனை செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் படை அதிகாரி ஒருவரின் குரல் பதிவு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து தப்பியவர்கள் ரஷ்யாவிற்கு செல்ல வேண்டாம் என கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவிற்கு வேலைக்காக அனுப்பி வைப்பதாக கூறினால் அந்த மோசடியில் சிக்க வேண்டாம் என மக்களிடம் கோருவதாக காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.