போதைப்பொருள் விநியோகத்தை ஒழித்து, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பங்கேற்புடன் இன்று (8) ஆரம்பிக்கப்பட்ட புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்காகக் கொழும்பு மாவட்டத்தில் 11 புனர்வாழ்வு நிலையங்களும் நாடளாவிய ரீதியில் 256 புனர்வாழ்வு நிலையங்களும் நியமிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.