விடுதலைப் புலிகளின் பத்திரிகையில் பணியாற்றிய ஐ. டபிள்யூ. சஞ்சீவ (வயது 54) என்பவர் நேற்றுமுன்தினம் அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் தெரித்துள்ளனர்.சுட்டுக்கொல்லப்பட்ட நபர், இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரியான லெப். கேணல்துவான் முத்தலிப் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைதாகி விடுதலையானவர் என்றும் அறிய வருகின்றது.
இவர், கொழும்பு – பொரளை லெஸ்லி ரணகல மாவத்தையில் சனிக்கிழமை அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டார். தொழில் தகராறு காரணமாகவே அவர் கொல்லப்பட் டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து மேலும் அறிய வருவதாவது,களனி கல்பொரல்ல பகு தியை சேர்ந்த சஞ்சீவ அவரின் பூர்வீக வீட்டின் அருகில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இவர், துப்புரவு சேவை ஒப்பந்தங்களை நிறுவனங்களிடம் பெற்று அவற்றுக்கு ஆட்களை சேர்க்கும் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். தினமும் அதிகாலை பொரளையில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அவ்வாறு வழமை போன்று, தனது மகளுடன் சனிக்கிழமை அதிகாலை களனியிலிருந்து பொரளைக்கு அன்றைய தினமும் சென்றுள்ளார்.சனிக்கிழமை அதிகாலை வீட்டின் முன்பாக நின்ற வரை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டார். இதில், அவர் காயமடைந்து தரையில் விழுந்துள்ளார். அதன் பின்னரும் துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று விசார ணைகளில் தெரியவந்தது.
அவர் இறந்து கிடந்த இடத்தில் 20இற்கும் மேற் பட்ட ரி-56 ரக துப்பாக்கி தோட்டா கோதுகள் வீதி யில் சிதறிக் கிடந்தன.உயிரிழந்தவர் 2002 அரசு – புலிகள் சமா தான உடன் படிக்கை நடைமுறையிலிருந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்த ஒரு பத்திரிகையில் பணியாற்றியவர் என்று என்று புலனாய்வு வட்டார தகவல்கள் கூறுகின்றன.2005 ஒக்ரோபர் 29 ஆம் திகதி நாரஹன் பிட்டியில் இராணுவ புலனாய்வு அதிகாரியாக இருந்த லெப். கேணல் துவான் முத்தலிப் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபராக இவரும் கைதுசெய்யப் பட்டு, பின்னர் விடுவிக்கப் பட்டார். அவரின் தற்போதைய துப்புரவு சேவை வணிகம் தொடர்பான தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.