இலங்கையில் தொழுநோயின் தாக்கம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில் மட்டும் 264 புதிய தொழுநோயாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டுபிடிக்கப்பட்டவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் நிருபா பல்லேவத்த குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில் 2023 ஆம் ஆண்டில், 1,580 தொழுநோயாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் புதிதாக கண்டறியப்பட்டவர்களாவர். அதாவது 1,520 புதிய நோயாளிகளாவர். 1,580 தொழுநோயாளர்களில் 180 குழந்தைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது 12 % குழந்தைகளாவர் இவர்கள் 15 வயதுக்குட்பட்டவர்களாவர்.
இலங்கையின் தொழுநோயின் தாக்கம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.