ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் உட்பட்டவர்கள் பயணித்த உலங்கு வானூர்தியை கண்டுபிடித்ததாக மீட்பு பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் ரைசி உட்பட அதில் பயணித்த எவரும் உயிருடன் இருக்க சாத்தியமில்லை என்று ஈரானிய செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.
எனவே, அந்த உலங்கு வானூர்தியில் பயணித்த ஜனாதிபதி ரைசி உட்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகமான MEHR செய்தி வெளியிட்டுள்ளது.
அதேசமயம் ஈரானிய ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மாலெக் ரஹ்மதி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த மற்ற நபர்கள் “தியாகி” என சர்வதேச ஊடகமான மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
ரைசி இறந்துவிட்டார் என்பதற்கு இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை, ஆனால் விபத்து நடந்த இடத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்புக்கள் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.