நேற்றைய தினம் 20,05.2024ம் திகதி திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு DP Education IT Campus உத்தியேக பூர்வமாக அல் கிம்மா காரியாலய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது.
அல் கிம்மா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் ஓட்டமாவடி DP education IT campus ன் இணைப்பாளருமான மெளலவி அஷ்ஷெய்க் MMS. ஹாறூன் ஸஹ்வி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக DP Education நிறுவனத்தின் தவிசாளரும் இலங்கையின் பிரபல வர்த்தகரும் முன்னாள் அமைச்சருமான தம்மிக்க பெரேரா அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் கெளரவ அதிதிகளாக ICST பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் முன்னாள் ஆளுனருமான கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்களும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மெளலானா மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி ஹபீப் றிபான்இ அகீல் எமேர்ஜன்ஷி அமைப்பன் தலைவர் அல் ஹாஜ் நியாஸ்டீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கல்விமான்கள், வர்த்தகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது கணினி துறையில் அசாதாரன திறமையுடைய ஓட்டமாவடி மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் தரம் பத்தில் கல்வி கற்கும் அப்குனான் அஹமட் எனும் மாணவனை பாராட்டி பிரதம அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.