காணி ஆணையாளர் திணைக்களத்திலுள்ள வெற்றிடங்களால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக காணி ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தமது திணைக்களத்தில் உதவி ஆணையாளர் நாயகம் பதவிக்கு 26 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது ஒன்பது உதவி ஆணையாளர் நாயகங்கள் பணிபுரிவதாகவும் மேலும், ஏனைய அதிகாரிகளுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், காணி ஆணையாளர் திணைக்களத்தில் சிங்கள மொழிக்கு மேலதிகமாக தமிழ் மொழியையும் கையாளக் கூடிய உத்தியோகத்தர்கள் இல்லாமையுமே பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன், பரம்பரைப் பத்திரங்களைத் தயாரிப்பதில் மொழியறிவு கொண்ட அதிகாரிகளில்லையெனவும் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், தமிழ் மொழி தெரிந்த உத்தியோகத்தர்களை ஏனைய அலுவலகங்களில் இருந்து அழைக்க வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.