Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மண்டூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டு மண்டூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள வயல் வெளியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை மாலை (27) மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவதுவதாவது,

வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியில் அமைந்துள்ள வயல் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ரஞ்ஜித்குமார் முன்னிலையில் கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டது. சடலத்தை பார்வையிட்ட நீதவான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, காவல்துறை மோப்ப நாய் கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மண்டூர் கோட்டமுனை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய தம்பிராசா பதிராசா என்ற மீன் வியாபாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும், இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த தம்பிராசா பதிராசா என்பவர் ஞாயிற்றுக்கிழமை(26) வீட்டிலிருந்து புறப்பட்டவர் திங்கட்கிழமை மாலை வரையில் வீடு வந்து சேரவில்லை என உறவினர்கள் தெரிவித்ததோடு, காவல்துறையில் முறைப்பாடு பதிவு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் பயணித்த துவிச்சக்கரவண்டியும் அப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு
செய்திகள்

குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு

June 7, 2025
சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி
செய்திகள்

சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி

June 6, 2025
ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை
செய்திகள்

ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை

June 6, 2025
இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு
செய்திகள்

இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு

June 6, 2025
செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி
செய்திகள்

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

June 6, 2025
உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு
செய்திகள்

உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு

June 6, 2025
Next Post
அறிகுறிகள் தென்பட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அறிகுறிகள் தென்பட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு