ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (31) கைது செய்யப்பட்டதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 15 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 1,481 லீற்றர் கோடா உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.