ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபையினால் 1972 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் ஐந்தாம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இலங்கையில் மலையக பிரதேசமான அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் டயகம வெஸ்ட் தோட்டத்தில் (05.06.2024) அத் தோட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
“பசுமையான சூழலை உருவாக்கி பிள்ளைகளுக்கு கையளிப்போம்” மக்களுக்கு சுத்தமான குடி நீரை வழங்குவோம்” எனும் தொணிப்பொருளில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வில் 500 மூங்கில் கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட பிராந்திய முகாமையாளர் ரொகான் வீரகோன், தோட்ட முகாமையாளர் வர்ணரனதுங்க மற்றும் வன பகுதி அதிகாரி பி நந்தகுமார். உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதோடு டயகம தமிழ் மகா வித்யாலய பாடசாலை மாணவர்கள் அதிபர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வு கலந்து கொண்டு மூங்கில் கன்றுகளை நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.