நிறைவேற்றப்பட்ட புதிய மின்சாரச் சட்டத்தின்படி மின்சார சபை ஊழியர்கள் 12 நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.
ஊழியர்களுக்கு விருப்பமான நிறுவனத்தை தேர்வு செய்ய நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதற்காக பணியாளர்கள் தங்களுக்கு விருப்பமான நிறுவனத்தை தேர்வு செய்ய ஒரு மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
புதிய மின்சாரச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் எவரும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
பன்னிரண்டு புதிய நிறுவனங்களுக்கும் தனித்தனி நிதித் துறைகள் இருப்பதால், மின்சார சபையின் முக்கிய தலைமையகத்தில் உள்ள நிதித் துறை ஊழியர்களின் வேலைகள் ஆபத்தில் உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபை இன்னும் அரசாங்கத்தின் கீழ் இருப்பதாகவும் அது எவருக்கும் விற்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.