உலகலாவிய ரீதியில் குறைந்த பாலின இடைவெளியைக் கொண்ட நாடுகளில் இலங்கை, தெற்காசிய பிராந்தியத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
வருடாந்த உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின்படி, தெற்காசிய பிராந்தியத்தில் பங்களாதேஷ் நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
நேபாளம் இரண்டாவது இடத்திலும், இந்தியா ஐந்தாவது இடத்திலும், பாகிஸ்தான் ஏழாவது இடத்திலும் உள்ளன.
பாலின சமத்துவம் நான்கு முக்கிய பரிமாணங்களில் அளவிடப்படும் நிலையில், இந்த பாலின இடைவெளி குறியீடு 2006 முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
உலகிலேயே மிகக் குறைந்த பாலின இடைவெளியைக் கொண்ட நாடாக ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது.
இதில் பின்லாந்து இரண்டாவது இடத்திலும், நோர்வே மூன்றாவது இடத்திலும், நியூசிலாந்து நான்காவது இடத்திலும், சுவீடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.