நாட்டில் 17 வயது பூர்த்தியான எவரும் சாரதி விண்ணப்பத்தைப் பெறுவதற்கு பயிற்சி பெறலாம் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், சாரதி உரிமத்தை பெற்றுக் கொள்பவர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பான சட்டத்தை அறியாமல் பலர் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தூண்டப்படுவதாகவும், வயது பூர்த்தியாகும் வரை சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதில்லை எனவும் அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிநிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்
அதேநேரம், ஓட்டுநர் உரிமத்தில் பயிற்சியாளரின் பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்