மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ் சேனை பிரதான வீதியை அண்மித்த பொதுமக்களின் காணிகளும், பாடசாலை காணி ,பாடசாலை மைதானம் என்பன கடந்த(1991) 32 வருடங்களாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த 8.6 ஏக்கர காணி 6.6.2023 இன்று செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது.
களுவங்கேணி முறக்கொட்டாஞ் சேனை திருமலை வீதியுடன் இணைக்கும். பாதையும் கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 32வருடங்களாக இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்தமையினால் பொது மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு மாற்று பாதைகளை பயன்படுத்தி வந்த நிலையில் இன்று குறித்த பாதையும் திறந்து வைக்கப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோர் முன்னிலையில் கிழக்கு மாகாண இராணுவ தளபதி காணி விடுவிப்பு பத்திரத்தை வழங்கி வைத்தார் பின்பு தனியார் காணிகள் காணி உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.