கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றே மருதங்கேணிக்கு சென்று வாக்குமூலம் அளிக்க வேண்டும் என பொலிஸார் வலியுறுத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள அவரது வீட்டில் வைத்து கஜேந்திரக்ககுமார் பொன்னம்பலம் கைது செய்யப்படுவதற்கு முன்னர் , பொலிஸார் விடுக்கும் அறிவிப்பை மேற்கோளிட்டு எம்.ஏ.சுமந்திரன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு அவரைக் கைது செய்யப் போவதாக மிரட்டுவது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும் இது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புரிமையை மீறும் செயலாகும் எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.
அதோடு இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அவர் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளமை அடக்குமுறை என்றும் எம்.பி சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.