Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பரீட்சை நிலையத்தில் செய்வதறியாது தவித்த மாணவி; உதவிக் கரம் கொடுத்த பொலிஸ் அதிகாரி!

பரீட்சை நிலையத்தில் செய்வதறியாது தவித்த மாணவி; உதவிக் கரம் கொடுத்த பொலிஸ் அதிகாரி!

3 years ago
in செய்திகள்

கல்விப் பொதுத் தராதர பரீட்சை நிலையத்தில் செய்வதறியாது தவித்த மாணவி ஒருவருக்கு உடனடியாக உதவிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த முறை கல்விப் பொதுத் தராதர பரீட்சைக்கான பரீட்சை நிலையமாக செயற்படும் மொரகஹஹேன கோனாபொல பழனொறுவ மகா வித்தியாலயத்தின் பிரதான வாயிலின் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஏ. குலரத்னவே இந்த பாராட்டுக்கு உரியவராவார்.

குறித்த பொலிஸ் சார்ஜன்ட் நேற்று காலை பரீட்சை நிலைய வாயிலில் கடமையிலிருந்தபோது மாணவி ஒருவர் கண்களில் கண்ணீர் வழிய பதற்றத்தோடு வந்துள்ளார்.

பொலிஸ் அதிகாரி மாணவியிடம் விசாரித்த போது, எனது அட்மிஷனை (பரீட்சை அனுமதி அட்டை) கொண்டு வர மறந்துவிட்டேன். இன்னும் சில நிமிடங்களில் பரீட்சை ஆரம்பமாகிவிடும். என்னால் பரீட்சை எழுத முடியாது என கூறி அழ ஆரம்பித்துள்ளார்.

பொலிஸ் சார்ஜன்ட் குலரத்ன தனது கைக்கடிகாரத்தைப் பார்த்த போது, நேரம் காலை 8 மணி 22 நிமிடங்கள். பரீட்சை தொடங்க இன்னும் 8 நிமிடங்கள் மட்டுமே உள்ளது என்பதை உணர்ந்தார்.

ஒவ்வொரு நிமிடமும் மதிப்புக்குரியது என்பதை நன்கு புரிந்து கொண்ட பொலிஸ் சார்ஜன்ட் குலரத்ன, பாடசாலை பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகபூர்வ ஜீப்பில் வந்திருந்த பொலிஸ் அதிகாரி துசித விக்கிரமரத்னவிடம் விரைந்து சென்று மாணவிக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையை தெரிவித்தார்.

மறுபேச்சின்றி பொலிஸ் அதிகாரி துசித விக்கிரமரத்ன மாணவிக்கு உதவ அனுமதியளித்ததால், மாணவியை தனது பொலிஸ் மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு நான்கு கிலோமீற்றர் தூரத்தில் நாகாஸ் சந்தியில் உள்ள மாணவியின் வீட்டிற்குச் அழைத்துச் சென்றார்.

உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பரீட்சை நிலைய பொறுப்பாளரிடம் சென்று நடந்த சம்பவத்தை கூறியதுடன், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாணவியின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று பரீட்சைக்கான அனுமதி அட்டையை கொண்டுவருவதாக தெரிவித்தார்.

பொலிஸ் சார்ஜன்ட் குலரத்னவின் உதவியால் மாணவி குறித்த நேரத்திற்கு வந்து பரீட்சைக்கு தடையின்றி முகம் கொடுக்க முடிந்தது.

சில நிமிடங்களிலேயே நடந்த இந்த நற்செயலை அறிந்து கொண்ட பெற்றோர்கள், பொலிஸ் அதிகாரியை பாராட்டியதுடன், தேவையான அனுமதி வழங்கிய நிலைய பொறுப்பாளருக்கும் நன்றியை தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
பாராளுமன்றத்துக்குவர கஜேந்திரகுமாருக்கு அனுமதி மறுப்பு; தமிழ் எம்பிக்கு ஆதரவாக பேசிய சஜித்!

பாராளுமன்றத்துக்குவர கஜேந்திரகுமாருக்கு அனுமதி மறுப்பு; தமிழ் எம்பிக்கு ஆதரவாக பேசிய சஜித்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு